tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு எதிர்க்க வேண்டும்

சென்னை, செப்.15- புதிய கல்விக்கொள்கை விஷயத்தில் வரும் நவம்பர் மாதத்திற்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. இதற்குப் பொதுமக்கள் குரல் கொடுப்பதை விடவும் முக்கியமானது தமிழக அரசு மக்கள் சார்பாக வலியுறுத்துவதுதான் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.  அனந்தகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மனிதநேயப் போராளி வழக்கறிஞர் பி.வி.பக்தவத் சலத்தின் 12 வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில், புதிய தேசிய கல்விக் கொள்கை ஒரு பார்வை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.  இதில் அவர்  பேசும்போது கூறிய தாவது:-

“ஏற்கனவே பல குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன. அவை தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் அறிக்கை தர அமைக்கப்படவில்லை. கோத்தாரி குழு கூட ‘தேசிய வளர்ச்சிக்கான கல்வி’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.  மற்ற குழுக்களுக்கு ஆய்வு வரம்புகள் அளிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்துதான்  இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அளிக்க வேண்டும் என்று தெளிவாகக் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தேசிய கல்விக் கொள்கைக்கு நியமிக்க ப்பட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவுக்கு அப்படிப்பட்ட பொருள் வரம்பு எதுவும் நிச்சயிக்கப் படவில்லை. பொதுவாக கல்விக் கொள்கை என்று கூறப்பட்டதே சரியில்லாத விஷயமாகும்.

மற்றொன்று, இதற்கு முன் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களில் மிகச் சிறந்த கல்வியாளர்கள் இடம்பெற்றி ருந்தனர். அவர்கள் கல்வி  மேம்பாட்டை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த வர்கள். ஆனால், இந்தக் குழுவில் கஸ்தூரி ரங்கன்  விண்வெளித் துறை ஆய்வாளர் என்ற அளவில் கல்வியாளராக நாம் கருதலாம். ஆனால் மற்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் பாஜகவின் ஆதரவு நிலை கொண்டவர்கள். இத்தகைய குழுக்களின் பரிந்துரைகள் அறிக்கையை  நாடாளு மன்றத்திற்கு அளிப்பது நடைமுறையாக இருந்தது.  ஆனால் இந்தக் குழு அளித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்காம லேயே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ப்பட்டதும்  கவனிக்க வேண்டியதாகும். புதிய கல்விக் கொள்கை  மாநில அரசின் அதிகாரங்களையும் பறிக்கப்  போகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா  என்பதையும் நாம் கேள்வியாக  எழுப்ப வேண்டும்.” இவ்வாறு அனந்தகிருஷ்ணன் பேசினார்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன்,“தேசிய கல்விக்கொள்கை முன்வரைவைத் தயாரித்துள்ள கஸ்தூரிரங்கன் குழு அரசமைப்பு சாசனப்படியான கடமைகளை யும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் அறிந்திருக்கவில்லை, அல்லது வேண்டு மென்றே அவற்றைப் புறக்கணித்திருக்கிறது என்று குற்றம் சாட்டிய அவர், இக்குழு வின் பரிந்துரைகள் அரசமைப்புச் சட்ட த்திற்குப் புறம்பானவை, நடைமுறைப்படு த்தக்கூடாதவை” என்றும் கூறினார். 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது குழந்தைகளை வெளியேற்றும் கொள்கைதான். அவற்றில் தேர்ச்சியடைந்தால்கூட குழந்தைத் தொழிலாளிகளை உருவாக்குவதாகவே கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சமத்துவத்தை மீறுகிற இக்கொள்கை வரைவறிக்கை வர்ணாசிரமத்துக்குப் புத்துயிரூட்ட முயல்கிறது என்றும் நீதிபதி சாடியுள்ளார். 

அரங்கிற்கு நேரில் வர இயலாத நிலையில் அவரது உரை அச்சிடப்பட்ட படிகளாகப் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. கல்வியாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு தனது உரையில், “மாநிலங்களுக்கென வரையறுக்கப்பட்ட உரிமைகளிலும் அதிகாரங்களிலும் மத்திய அரசு தலையிட முடியாது என்றிருக்கிற சட்டவிதிகளை இந்தக் கொள்கை நேரடியாக மீறுகிறது. கூட்டாட்சிக் கோட்பாட்டையே கேள்விக்கு உள்ளாக்குகிறது,” என்றார்.

இந்தக் கல்விக்கொள்கை வரைவறிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், அவ்வாறு கைவிடுமாறு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும், அரசின் முழுப்பொறுப்பிலும் செலவிலும் சமமான கற்றல் வாய்ப்பு அனைத்து நிலைகளி லும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானங்கள் முன்மொழிய ப்பட்டன.  பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளையும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கின் நோக்கம் பற்றி விளக்கினார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். பி.வி. பக்தவச்சலத்தின் சகோதரர் மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன் வரவேற்றார். பி. வி. பி.  மகள் வழக்குரைஞர் பி.எஸ். அஜிதா நன்றி கூறினார்.  

;